கனடாவில் சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் கனடாவில் சராசரி வாடகை தொகை 2149 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது மாதாந்த வாடகை தொகை 1.5 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் வருடாந்த அடிப்படையில் 11.1 விதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடுகளுக்கான வாடகை தொகை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் சராசரியாக 15 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகை தொகையானது 1905 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக நோவா ஸ்கோட்டியா மற்றும் அல்பர்ட்டா ஆகிய மாகாணங்களில் கூடுதல் அளவில் வாடகை தொகை அதிகரித்து செல்லுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post