கனடாவில் ஹய்யுண்டாய் மற்றும் கியா ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹய்யுண்டாய் நிறுவனத்தின் சுமார் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 942 வாகனங்கள் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகவும், அமெரிக்காவிலிருந்து 16 லட்சத்து 4251 வாகனங்கள் வாபஸ் பெற்று பல் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சில வகை மாடல்களை இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை வாகனங்கள் திடீரென தீப்பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் பிரேக் ஒயில் கசிவு இலத்திரனியல் ரீதியாக தொழிற்பட்டு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும்போது அல்லது பயணிக்கும் போது தீ பற்றி கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த தீப்பிடிப்புகள் காரணமாக எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா நிறுவனத்தின் சிலவகை வாகனங்களும் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யப்பட்ட சில மாடல் கார்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியாராக வாகனங்கள் மொத்தமாக 276225 வாகனங்கள் கனடாவில் இருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
Discussion about this post