கனடாவில் கார்பன் வெளியிடக்கூடிய எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் கனேடிய மத்திய அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 2035ம் ஆண்டில் கனடாவில் கார்பனை உமிழும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட உள்ளது.
இதன்படி பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே புதிதாக அனுமதி வழங்கப்பட உள்ளது.
அதேசமயம், இலத்திரனியல் வாகனங்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2026, 2030 மற்றும் 2035 என கட்டம் கட்டமாக பூச்சிய கார்பன் வெளியீட்டைக் கொண்ட வாகனங்கள் முழுமையாக கனடாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது
Discussion about this post