கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கனேடிய மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் பணவீக்கத்தை இரண்டு வீதமாக குறைக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் வட்டி வீத குறைப்பிற்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் துரித கதியில் தீர்மானங்கள் எடுக்கப் போவதில்லை என கூறிய ஆளுனர், அந்நாட்டில் பணவீக்க நிலைமைகள் குறைவடைந்து செல்வதை காண முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 2024ம் ஆண்டில் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகசுவும் ஆளுனர் ரிப் மெக்கலம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகப் பொருளாதாரத்தில் நிலவி வரும் பதற்ற நிலைமைகள் பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகளில் தாக்கத்தை செலுத்தும் எனவும் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
எனினும், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பொருளாதார நிலைமைகள் குறைந்து விட்டதாக கூறமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post