கனடாவின் மொன்றியால் பகுதியில் வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மொன்றியலின் செயின்ட் லெனோட் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி இந்த வங்கி கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வங்கி ஊழியரை அச்சுறுத்தி, பணத்தைக் களவாடி வாகனம் ஒன்றில் இந்த நபர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
36 வயதான நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தப்பிச் சென்ற வாகனமும் களவாடப்பட்ட ஒரு வாகனம் என தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபரிடம் நடத்திய சோதனையின் போது களவாடப்பட்ட வாகனத்தில் இருந்த துப்பாக்கி தோட்டா உள்ளிட்ட பல்வேறு சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.சட்டவிரோத ஆயுத பயன்பாடு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.இந்த நபர் ஏற்கனவே குற்ற செயல்களுடன் தொடர்புபட்டு தண்டிக்கப்பட்ட ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post