கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வெப்ப நிலை காரணமாக மாணவர்கள் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் வெப்ப அலை நிலவி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டொரன்டோ உள்ளிட்ட ஒன்றாரியோ மாகாணத்தின் அனேக பகுதிகளில் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது.
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் வயோதிபர்களும், பாதிப்புகளை எதிர் நோக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வகுப்பறைகளில் கற்கும் மாணவர்கள் அதிக அளவில் வெப்பநிலையினால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மின்விசிறிகள் மூலம் இந்த வெப்பநிலையினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கட்டுப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் காற்று சீராக்கிகள் காணப்பட்ட போதிலும் பல பாடசாலைகளில் மின்விசிறிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவிவரம் வெப்பநிலை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்பட கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post