கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹமில்டனில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 வயதான ஹபிடொன் சொலோமொன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் தேடப்பட்டு வருவோர் பட்டியலில் ஆறாம் இடத்தில் இந்த நபர் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு 18 வயதான நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் சொலொமன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Discussion about this post