கனடாவின் மொன்றியாலில் நடைபெற்ற மரதன் ஓட்ட போட்டியில் இரண்டு பேர் மாரடைப்பு காரணமாக பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. போட்டி ஏற்பாட்டாளர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
போட்டி நடைபெறும் இறுதி எல்லையை கடந்ததன் பின்னர் இவ்வாறு இரண்டு பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மரதன் ஓட்டத்தில் ஈடுபடும் 80,000 பேரில் ஒருவருக்கு இவ்வாறு மாரடைப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியலில் நடைபெற்ற 30ஆவது போட்டியில் சுமார் 12000 பேர் பங்கேற்று இருந்தனர். 42 தசம் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணித்தியாலங்கள் 23 நிமிடங்களில் பூர்த்தி செய்த பிளக்ஸ் ராப் என்னும் கென்னிய மரதன் ஓட்ட வீரர் இந்த போட்டியின் முதல் இடத்தை பெற்றுக் கொண்டார்.
Discussion about this post