கனடாவில் துறைமுக பணியாளர்கள் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கிளம்பிய மாகாணத்தின் துறைமுகங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுமார் 70400 பணியாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
சம்பளம் பனிச்சூழல் பாதுகாப்பு போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டு பிரதான தொழிற்சங்கங்களினால் இந்த பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும் இதனால் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த தொழிற்சங்க போராட்டம் காரணமாக கனடாவின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post