கனடாவின் கியூபெக் மாகாண அரசியல்வாதிகள் தங்களது சம்பளத்தை உயர்த்திக்கொள்ளும் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளனர்.
மாகாண ஆளும் கட்சி சம்பளத்தை 30000 டொலர்களினால் உயர்த்தும் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்த யோசனைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதனையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பில்24 என்ற சட்டமூலத்தின் ஊடாக கியூபெக் மாகாண சட்ட மன்ற உறுப்பினர்களது சம்பளத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது வழங்கப்படும் 101000 டொலர் சம்பளம் 131000 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது.
அமைச்சர்களுக்கு 53000 டொலர்களினாலும், முதல்வரின் சம்பளம் 63000 டொலர்களினாலும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் கடந்த 2000மாம் ஆண்டில் இறுதியாக சம்பளம் அதிகரிக்கப்பட்டது.
பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சம்பளங்களை உயர்த்துவதற்கு அரசியல்வாதிகள் யோசனை முன்வைத்துள்ளனர். சம்பளம் உயர்த்தப்பட்டால் கனடாவில் கூடுதல் தொகை சம்பளம் பெறும் மாகாண அரசியல்வாதிகளாக கியூபெக் மாகாண அரசியல்வாதிகள் திகழ்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post