கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கியூபெக் (Quebec) மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளன.
கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகலிடம் கோருவோர்
அதற்கமைய விரைவாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலனை செய்ய இதுவரை 18 மாத காலங்கள் எடுக்கப்படுகின்றன.எனினும் அதனை 9 மாதங்களாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் முதற்கட்டமாக தலைநகர் ஒட்டாவாவில் அறிமுகம் செய்யப்படுவதுடன், விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post