கனடாவின் ஒன்ராறியோ மாகாண பாடசாலைகளில் புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாடத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து அதாவது புதிய கல்வியாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
உளச்சுகாதாரம்,கணிதம்,மொழி,வாசிப்பு ,கூட்டெழுத்து தொடர்பான பல்வேறு பாடங்களில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில் ஒன்பதாம் தரம் வரையிலான மாணவர்களுக்கு மொழி தொடர்பான புதிய பாடத்திடம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அதேபோன்று தரம் பத்து மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் கற்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post