கனடாவின் கியூபெக்கில் பல்லாயிரக் கணக்கான அரசாங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம் இந்த ஓருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கியூபெக் மாகாண அரசாங்கம் உரிய முறையில் செவிசாய்க்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எதிர்வரும் 21ம் தொடக்கம் 23ம் திகதி வரையில் மீளவும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள், சமூக நலன்புரி சேவைகள் மற்றும் சுகாதார சேவைகள் என்பனவும் இந்தப் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் நான்கு லட்சம் அரச ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post