கனடாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்புயல் வீசும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பனிப்புயல் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலையிலும் வெள்ளிக்கிழமை காலையிலும் பனிப்புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் ஒன்றாரியோவின் அநேக பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் எனவும் சில பகுதிகளில் பனிப்புயலின் தாக்கத்தை உணர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக சில சந்தர்ப்பங்களில் போக்குவரத்தில் ஈடுபடுவது சிரமமாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் 15 சென்றிமீற்றர்க்கு பனி பொழிவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post