கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் அமைந்துள்ள பல குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் ஈ கோலை என்னும் பயங்கர கிருமி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 142 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 26 குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுநீரகம் பாதிக்கப்படும் போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post