கனடா மார்க்கம் அன்ட் எல்சனில் நடந்த விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சனி பிறோக் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரும் 21 வயதானவர்கள் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது பிறந்தநாளான இன்று பிறம்டன் பகுதியில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்குச் செல்லும் போதே விபத்து நடந்துள்ளது.

விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.
Discussion about this post