கனடாவின் வடகிழக்கு பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், அப்பகுதியிலுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கனடாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள காடுகள் அதிக வெப்பத்தின் காரணமாக தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சரியாக 3 மணி அளவில் பற்றிய் காட்டு தீ ராட்சச புகை மூட்டங்களை உருவாக்கி தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து செயின் ஜான் கோட்டையை சுற்றியுள்ள மக்களை, தங்களது வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அரசு எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில் அங்குள்ள 136 வீடுகளிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காட்டுத் தீ சுமார் 12.31 சதுர அடி கிலோ மீட்டர் தூரத்திற்கு, பற்றி எரிவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய் வரை அப்பகுதியில் பகல் நேர வெப்ப நிலை 10 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருந்ததாக, கனடாவின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post