கனடாவில் டெல்டா வகை வைரஸ் திரிபுக்கு எதிரான நோய் எதிர்ப்பினை உருவாக்கிக்கொள்வது, 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டால் மாத்திரமே சாத்தியம் என, ஒண்டாரியோ பொதுச்சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒருங்கிணைந்த நோய் எதிர்ப்பினை பெற்றுக்கொள்ள, 80 வீதமான மக்கள் தொகை தடுப்பூசிகளை பெற வேண்டுமென ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. எனினும், தீவிரமான டெல்டா திரிபின் பரவல் காரணமாக, 90 வீதமான மக்கள் தொகை தடுப்பூசிகளை பெற்றிருக்க வேண்டுமென தற்போது பரிந்துரைக்கப்படுகிறது. ஒண்டாரியோவின் 90 வீதமான மக்கள் தொகை தடுப்பூசிகளை பெற்று முடிக்கும் வரை, நீண்டகால பராமரிப்பு நிலையங்களுக்கும் வைரஸ் பரவல் நுழையாது என எதிர்பார்க்க முடியாதென, மாகாண சுகாதார வைத்திய அதிகாரி Dr கீரன் மூரும் நேற்று தெரிவித்திருந்தார். இவ்வாறு 90 வீதமான மக்கள் தொகை தடுப்பூசிகளை பெற்று, ஒருங்கிணைந்த நோய் எதிர்ப்பினை கோவிட் 19க்கு எதிராக உருவாக்கிக்கொள்வது, வரும் ஆண்டு இலையுதிர் காலத்திலேயே நிகழுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post