சீன அரசாங்கம், கனடாவின் முக்கிய இடங்களில் காணி உள்ளிட்ட சொத்துக்களை கொள்வனவு செய்ய முயற்சித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி புலனாய்வுப் பிரிவு ஒன்றின் பிரதானி டேவிட் விக்னெல்ட் இதனைக் குறிப்பிட்டுள்ளர்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் அறியத்தருகையில்,
“உளவுப் பணிகளில் ஈடுபடுவதற்கு பொருத்தமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் காணி உள்ளிட்ட சொத்துக்கள் கொள்வனவு செய்வதே சீனாவின் நோக்கமாக காணப்பட்டது.
சீன அரசாங்கம் கனடிய விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதாக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், சீனாவின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
Discussion about this post