கனடாவின் கரையோரப் பகுதிகளின் பாடசாலைகள் சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
நோவா ஸ்கோட்டியாவின் நூற்றுக் கணக்கானவர்கள் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான
குளிருடனான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அட்லாண்டிக்கின் நான்கு மாகாணங்களில் இவ்வாறு கடுமையான குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது. நியூ பிரவுன்ஸ்விக், பிரின்ஸ்எட்வர்ட் உள்ளிட்ட சில பகுதிகளில் இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலையினால் தடைப்பட்டுள்ள மின்சார இணைப்புக்களை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post