கனடாவில் தென்கிழக்கு ஸ்காப்றோ பகுதியில் இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளைச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்கப்பட்டவர் காயமடைந்துள்ளதாகவும் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் சந்தேக நபர் குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post