திரைப்பட பாணியில் கனடா விமான நிலையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 தங்கக் கட்டிகள் எங்கே என்னும் கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை!
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.
சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ள வேறு சிலர் வந்துள்ளார்கள். அவர்கள் அந்த பார்சல்களுக்கான ஆவணங்களைக் கொடுக்க, அப்புறம்தான் தெரியவந்தது, ஏற்கனவே வந்த நபர்கள் மோசடியாளர்கள் என்பது.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஆனால், கொள்ளை நடந்து ஓராண்டு ஆகியும் கொள்ளையடிக்கப்பட்ட 6,600 கிலோ தங்கம் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவரவில்லை.
ஓராண்டு அமைதியாக இருந்த கனடா பொலிசார், திடீரென பிரம்மாண்டமான ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்கள். கொள்ளை சம்பவம் தொடர்பில் தாங்கள் 9 பேரை கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் மூன்றுபேரை தேடிவருவதாகவும் தெரிவித்தார்கள்.
ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட தங்கக்கட்டிகள் எங்கே என்ற கேள்விக்கு யாரிடமும் சரியான பதிலில்லை!
கொள்ளையடிக்கப்பட்ட தங்கள் உருக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கூற, அவர்கள் கூற்றுக்கு ஆதரவாக ஒரு விடயம் நடந்தது. அமெரிக்காவின் பெனிசில்வேனியா நெடுஞ்சாலையில் பிடிபட்ட ஒரு ட்ரக்கில் 65 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆக, கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை உருக்கி விற்று கொள்ளையர்கள் துப்பாக்கிகள் வாங்கிவிட்டதாக கூறினார்கள் பொலிசார்.
ஆனால், அவர்கள் கூறும் கணக்கு இடிக்கிறது. அதாவது கொள்ளையடிக்கப்பட்டது 400 கிலோ தங்கம். இன்றைய நிலவரப்படி அதன் மதிப்பு சுமார் 41 மில்லியன் டொலர்கள்.
CBC
பொலிசார் 65 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளார்கள், ஒரு துப்பாக்கியின் விலை சுமார் 500 டொலர்கள், அப்படியானால், 65 துப்பாக்கிகளின் விலை சுமார் 34,000 டொலர்கள். ஆக, மீதி பணம் எங்கே? அதாவது, மீதி தங்கம் எங்கே?
கனடா பொலிசாரிடம் இந்தக் கேள்விகள் எதற்கும் பதிலில்லை. தங்கம் இங்கே இருக்கலாம்., அங்கே இருக்கலாம், அந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என கூறுகிறார்களேயொழிய, தங்கம் என்ன ஆனது என்ற கேள்விக்கான சரியான பதில் யாருக்கு தெரியும் என்பதே தெரியவில்லை!
Discussion about this post