கனடாவில் (Canada) சிறுவர் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர்களை மானிடோபா காவல்துறையினர் கைது செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் 65 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர்.
ஊடகங்களிடம் விளக்கம்
இந்தநிலையில், இந்த சந்தேக நபர்கள் சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், போர்டேஜ் லா பிரேச நகர முதல்வரும் ஊடகங்களிடம் விளக்கம் அளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post