கனடாவில் கார் காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் சில வகை கார்கள் அதிக அளவில் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கார்கள் களவாடப்படுவதன் காரணமாக காப்புறுதி கட்டணத் தொகை அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. Rates.ca என்ற இணைய தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சில வகை கார்களுக்கான காப்புறுதி கட்டணங்கள் 25 முதல் 50 வீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
குறிப்பாக அதிக எண்ணிக்கையில் களவாடப்படும் கார் மாடல்களுக்கு இவ்வாறு காப்புறுதி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கார்கள் அதிக அளவில் களவாடப்படும் சில பிராந்தியங்களிலும் இவ்வாறு காப்புறுதி கட்டண தொகையானது உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் அதிக அளவு களவாடப்படும் வாகனமாக Honda CR-V வாகனம் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே இந்த வாகனத்திற்கான காப்புறுதி கட்டணங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post