கனடாவில் காட்டுத் தீ அனர்த்தம் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை காட்டுத் தீ சம்பவங்கள் வழமைக்கு மாறான வகையில் அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வழமையாக ஏற்படும் காட்டுத் தீ சம்பவங்களை விடவும் இந்த ஆண்டு அதிகளவு சம்பவங்களை பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ, பிரிட்டிஸ் கொலம்பியா போன்ற பகுதியில் தொடர்ச்சியாக காட்டுத் தீ அதிகளவில் பதிவாகும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வரையில் காட்டுத் தீ பரவுகை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. காட்டுத் தீ சம்பவங்கள் குறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டுகளிலும் கூடுதலான அளவில் காட்டுத் தீ பரவுகைகள் ஏற்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் காட்டுத் தீ காரணமாக இந்த ஆண்டில் 13.4 மில்லியன் ஹெக்ரெயார் காணி அழிவடைந்துள்ளது.
Discussion about this post