கனடாவின் அல்பர்ட்டாவில் இடம்பெற்ற காட்டுத் தீ காரணமாக 20 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின சமூகத்தினர் இடம்பெயர நேரிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் நிலையமும் தீக்கிரையாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அண்டிய பகுதிகளில் வாழ்ந்து வந்த 3500 பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயணைப்பு பணிகளை முன்னெடுப்பதற்காக உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ சம்பவங்கள் தொடரும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post