கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழும் Sharon Rosel என்னும் பெண், இரவு 3.00 மணிவாக்கில் பயங்கரமாக நாய் குரைப்பதைக் கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார்.
அப்போது, கார் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கதவு திறந்திருப்பதை அவர் கவனித்துள்ளார்.
யார் கதவைத் திறந்தது என்று பார்க்க அவர் செல்ல, அப்போதுதான், கார் கதவைத் திறந்தது மனிதர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது.
கார் கதவின் கண்ணாடிகள் உடைந்து சிதறிக் கிடக்க, கரடி ஒன்று Sharon தனது காருக்குள் வைத்திருந்த சோடா கேன்களை எடுத்து குடித்துக்கொண்டிருந்திருக்கிறது.
தனது காருக்குள் 72 சோடா கேன்களை வைத்திருந்திருக்கிறார். அவற்றில் 69 கேன்களை அந்தக் கரடி காலி செய்துவிட்டதாம்.
கரடியைத் துரத்துவதற்காக, முயன்றதாகவும் இருப்பினும் கரடி தன் வேலையை முடித்தபிறகுதான் அங்கிருந்து
சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post