கனடாவில் பூங்கா ஒன்றில் கரடி தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அல்பர்ட்டாவின் பான்ஃப் தேசிய பூங்காவில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த தாக்குதலை நடத்திய கரடியை அதிகாரிகள் கருணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இந்த கரடியை அதிகாரிகள் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் இரவு நேரத்தில் இடம் பெற்றதனால் குறித்த இடத்திற்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் செல்வதற்கு நீண்ட நேரம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Discussion about this post