ஒன்ராறியோவிலுள்ள கடற்கரை ஒன்றில் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனதாக தகவல் வெளியானதும், கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக்கூட்டமும் கடலில் இறங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஒன்ராறியோவின் என்னும் கடற்கரையில் கடந்த வாரம் ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். தகவலறிந்து கடற்கரைக்கு வந்த பொலிசார் கண்ட காட்சி அவர்களை நெகிழவைத்துள்ளது.
ஆம், குழந்தை க டலில் விழுந்திருக்கலாம் என்ற தகவல் கிடைக்கவே, கடற்கரைக்கு வந்திருந்த மொத்தக் கூட்டமும் கடலில் இறங்கியுள்ளது. ஒரு வலை போல, பிள்ளையைத் தவறவிட்டுவிடக்கூடாதென எண்ணி, அனைவரும் கடல் நீரை அங்குல அங்குலமாக அலசியுள்ளனர்.
அரை மணி நேரத்துக்குள் அந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளாள். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக எதையும் எண்ணாமல் கடலில் இறங்கிய பொதுமக்களுக்கு தங்கள் சிறப்பு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post