கனடாவின் வின்னிபெக் பகுதியில் நான்கு பெண்களை படுகொலை செய்த தொடர்கொலையாளி ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.பழங்குடியின பெண்கள் இவ்வாறு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இந்த படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய ஜெர்மி சிக்கிபிக்கி என்ற 37 வயதான நபருக்கு நீதிமன்றம் நான்கு ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த கொலையாளிக்கு 25 ஆண்டுகள் வரையில் பரோலில் செல்ல அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோர்கன் ஹரிஷ, மேசிடிஸ் மய்ரான், ரெபேக்கா கொன்டோயிஸ் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பெண் ஒருவர் ஆகிய நான்கு பெண்களை இந்த நபர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மீது நான்கு கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நான்கு ஆயுள் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் சட்டங்களின் பிரகாரம் வழங்கப்படக்கூடிய அது உட்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த தண்டனை குற்றச் செயலுக்கு போதுமானதல்ல எனவும் பிரதம நீதியரசர் கிளையன்ட் ஜாயல் தெரிவித்துள்ளார்.
Discussion about this post