கனடாவின் ஆல்பர்ட்டா மாகாண மக்களுக்கு எரிபொருள் தொடர்பில் வழங்கப்பட்டு வந்த சலுகை மேலும் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாகாண மக்கள் குறைந்த விலைக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எரிபொருள் தொடர்பிலான வரியை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்வதன் மூலம் இந்த சலுகை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த வரி சலுகை காலாவதியாக உள்ள நிலையில் அரசாங்கம் குறித்த வரிச்சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிப்பதாக அறிவித்துள்ளது. இந்த வரி சலுகை மூலம் ஆல்பர்ட்டா மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான பணத்தை சேமிக்க முடியும் என மாகாண அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கையானது ஆல்பர்ட்டா மக்களுக்கு உதவியாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post