கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தமக்கு எச்ஐவி தொற்று இருப்பதனை மூடி மறைத்த நபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தனது காதலியிடம் எச்ஐவி தொற்றாளி என்பதனை இந்த நபர் மூடி மறைத்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
35 வயதான கேப்ரியல் மெகாதா என்ற நபரை இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 20 19 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இருவரும் நெருங்கி பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகி இருந்த குறைத்த நபர் இந்த தகவலை தனது காதலியிடம் மறைத்து தொடர்பு பேணி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபருடன் வேறு எவரேனும் தொடர்பு பேணியிருந்தால் அது குறித்து அறிவிக்குமாறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நபரை கண்டால் போலீசாருக்கு அறிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post