கனடா- றொரன்டோவின் ஐபார்க் ரயில் நிலையமென்றில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
ரயிலில் கத்தியுடன் நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாக 911 அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது பெண் ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர் என தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
என்ன காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு கிடையாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Discussion about this post