அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் கனடாவுக்கு (Canada) மேற்கொண்ட பயணத்தின் போது, அவரிடம் கேள்வியெழுப்பிய தமிழ் இளைஞன் ஒருவர் குறித்த இடத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பான செய்திகளை அந்த கட்சி நிராகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் போலியானவை எனவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (National People’s Power) உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை
கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட அனுரகுமார திசாநாயக்க, ரொரன்ரோ (Toronto) மற்றும் வான்கூவர் (Vancouver) ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற சிறப்பு மக்கள் சந்திப்புக்களில் பங்கேற்றார்.
இதன்போது, புலம்பெயர்ந்த இலங்கையர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவரிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக தமிழ் இளைஞன் ஒருவன் கேள்வியெழுப்பியதாகவும், இதையடுத்து குறித்த இளைஞன் அனுரகுமாரவின் பாதுகாப்பு பிரிவினரால் வெளியேற்றப்பட்டதாகவும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
Discussion about this post