கனடாவில் அதிக வாடகை கட்டணம் வசூலிக்கும் நகரமாக வான்கூவர் தொடர்ந்து நீடிப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, வான்கூவரில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு வாடகையில் மாதந்தோறும் 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனவரியில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாத வாடகையானது 2,480 டொலர் வரையில் வசூலிக்கப்படுகிறது.
ஆனால்,. இரட்டை படுக்கையறை கொண்ட குடியிருப்புகளின் மாத வாடகை 3,500 டொலராகவே நீடிக்கிறது. கனடாவில் 23 நகரங்களில் வாடகை கட்டணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், 10 நகரங்களில் மட்டும் ஜனவரியில் வாடகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
7 நகரங்களில் வாடகை கட்டணம் குறைந்துள்ளதாகவும், ஆறு நகரங்களில் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எட்மண்டனில் டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு வாடகையில் 5% வரையில் கட்டணம் அதிகரித்துள்ளது.
ரொறன்ரோவில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு 1.8% வாடகை கட்டணம் அதிகரித்துள்ளதுடன், தற்போது 2,300 டொலர் வசூலிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் வாடகை கட்டணத்தில் 1.3% சரிவடைந்து தற்போது 2,200 டொலர் வசூலிக்கப்படுகிறது.
விக்டோரியாவில் ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு வாடகையாக 2,100 டொலரும் இரட்டை படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாத வாடகை 2,540 டொலரும் வசூலிக்கின்றனர்.
Discussion about this post