கனடாவில் காரை தாறுமாறாக ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டீஷ் கொலம்பியாவின் சரேவில் அதிகாலை 3 மணியளவில் வெள்ளை நிற பிஎம்டபில்யூ கார் வேகமாக வந்த போது அதை காவல்துறையினர் தடுக்க முயன்றனர்.
ஆனால் கார் ஓட்டுனர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிய நிலையில் வீடு ஒன்றின் மீது மோதி உள்ளே புகுந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அதே நேரம் ஓட்டுனருக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஓட்டுனரை கைது செய்தனர்.
வேகம் மற்றும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாலேயே இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post