பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயிரம் பேரை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிம்ரான்ஜித் சிங் என்ற நபர் இவ்வாறு ஆயிரம் பேரை கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் என விசாரணை ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சிம்ரன்ஜித் சிங்கிற்கு எதிராக அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கனேடிய எல்லை வழியாக பெரும் எண்ணிக்கையிலானவர்களை இவர் அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் சட்டவிரோதமான முறையில் கனடாவிலிருந்து அமெரிக்கா செல்ல முற்பட்ட எட்டு பேர் படகு கவிழ்ந்து பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சிம்ரன்ஜித், சட்டவிரோதமான முறையில் ஆயிரம் பேரை அமெரிக்காவிற்கு தாம் கடத்தியுள்ளதாக சிலரிடம் பெருமிதமாக கூறியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கனடாவிலிருந்து அமெரிக்கா அழைத்துச் செல்வதற்கா சிம்ரன்ஜித் 5000 முதல் 35000 டொலர்கள் வரையில் அறவீடு செய்வதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு கடத்தப்பட்டுள்ள சிம்ரன்ஜித் தற்பொழுது அமெரிக்க அதிகாரிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ள்ளார். தாம் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என சிம்ரன்ஜித் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post