Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கனடாவிலிருந்து வந்தவரை கொல்ல முயற்சி!

April 16, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை வந்த ரஷ்ய பிரஜை மீது தாக்குதல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவிலிருந்து வருகை தந்து அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டமை தொடர்பில் முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட நட்புரீதியான கட்டளையில் செய்யப்பட்டதாக சந்தேக நபர்களினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே இன்று கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அனலைதீவில் வீடுபுகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 4 பெறுமதியான அலைபேசிகள் மற்றும் 4 வளையல்கள் உள்ளிட்ட 13 இலட்சம் பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்து சென்றனர்.

சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம் (குருசாமி வயது 75) என்பவர் கால்கள் அடித்து முறிக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கனடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிரதி காவல்துறை மா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் உப காவல்துறை பரிசோதகர் பிரதீப் தலைமையிலான மாவட்ட குற்றத்தப்படுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளில் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய முதன்மை சந்தேக நபர் மற்றும் 24 வயதுடையவர் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

கனடாவில் உள்ள ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் ஊடாக ஒருங்கிணைத்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக முதன்மை சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். “இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை. வேலணைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவு சென்று சொல்லப்பட்டவர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம். நகைகள் மற்றும் அலைபேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம்” என்று முதன்மை சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வளையல்கள் மற்றும் மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நாளை முற்படுத்தப்படவுள்ளனர்.

Previous Post

விண்வெளியில் விளைந்த தக்காளி பூமிக்கு!

Next Post

மீண்டும் பெரிய கதிரையில் ஜீ.எல்.பீரிஸ்!

Next Post
மீண்டும் பெரிய கதிரையில் ஜீ.எல்.பீரிஸ்!

மீண்டும் பெரிய கதிரையில் ஜீ.எல்.பீரிஸ்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.