கனடாவில் இருந்து அதிகளவானவர்கள் நாடு கடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே நாடு கடத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாக கனடிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த 2023ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் மட்டும் 7032 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக நாற்பது பேர் வரையில் கடாவிலிருந்து நாடு கடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு கடத்தல்கள் அதிகரிக்கப்பட்டமைக்கு அகதி ஆதரவு அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
Discussion about this post