கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது. பழங்குடியின மக்களின் உரிமைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் மனித உரிமை நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கனடாவிற்கு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு எதிராக அரசாங்கம் பல வழிகளில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.
பழங்குடியின மக்களின் காணிகளையும், வளங்களையும் அபகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை என பல நெருக்கடிகளை பழங்குடியின மக்கள் அனுபவித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
பழங்குடியின மக்கள் மோசமாக நடாத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட ஏனைய அமைப்புக்களும் கனடா மீது குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post