கனடாவில் நிலவி வரும்காட்டுத் தீ நிலைமைகளை கட்டுப்படுத்துவறத்கு தென்கொரிய தீயணைப்புப் படையினர் நேசக்கரம் நீட்டியுள்ளனர். சுமார் 150 தீயணைப்புப் படையினர் கனடாவிற்கு பயணம் செய்துள்ளனர்.
கனடாவில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பாரியளவில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றது.
காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்காக சுமார் 1400 வெளிநாட்டு தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபட்டுள்ளனர். தென்கொரிய தீயணைப்புப் படையினர் கியூபெக் மாகாணத்தில் 30 நாட்கள் தங்கியிருந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவ உள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் தீ காரணமாக கனடாவில் சுமார் 80000 சதுர கிலோ மீற்றர் பரப்பு அழிவடைந்துள்ளது.
Discussion about this post