இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முதல் சிறப்புப் பிரதிநிதியாக மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் அமைரா எல்காபி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், கனடா முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமூகங்களுக்கு தங்கள் அரசு ஆதரவளிப்பதாகவும், இஸ்லாமிய வெறுப்பு, வெறுப்பை தூண்டும் வன்முறை மற்றும் அமைப்பு ரீதியான பாகுபாடுகள் எப்போது எங்கு நிகழ்ந்தாலும் அதனைக் கண்டிக்கவும், சமாளிக்கவும் நடவடிக்கை எடுப்பதற்கான உறுதிப்பாட்டை கனேடிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
Discussion about this post