கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக அண்மைய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருட்கள் சேவைகள் விற்பனை போன்றன மந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தை தொடர்ந்து கனடிய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நகர்கின்றதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post