கனடாவின் நோவா ஸ்கொட்டியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பாடசாலைகளள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 15 முதல் 25 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவுடன் கூடிய மழையும் பெய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பனிப்பொழிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு பெரும் சவால் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்தில் ஈடுபட்ட சில வாகனங்கள் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் போக்குவரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு நிலைமைகளினால் மின்சாரம் தடைப்பட்டதாகவும் பாடசாலைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post