பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாகாணத்தில் நிலவி வந்த கடுமையான காட்டு தீமைகளின் காரணமாக மாகாணம் தழுவிய ரீதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
நிபுணர்களுடன் கலந்த ஆலோசனை செய்து தற்பொழுது நிலவிவரம் காலநிலையையும் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக அவசர முகாமைத்துவ அமைச்சர் ப்ரோவின் மா தெரிவித்துள்ளார்.
எனினும் மாகாணத்தில் காட்டுத்தீ தொடர்பான அச்சம் தொடர்ந்து நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ காரணமாக தற்பொழுதும் 370 பேர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ காரணமாக இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் உயிரிழந்ததுடன் பெரும் எண்ணிக்கையிலான பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன.
Discussion about this post