கனடாவின் ஆறு மாகாணங்கள் மற்றும் இரண்டு பிராந்தியங்கள் தொடர்பில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கனடாவில் நியூபவுண்ட்லான்ட் மற்றும் லாப்ராடர் ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் 35 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவில் பகல் நேரத்தில் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவான வெப்பநிலை ஆரோக்கியத்தை பாதிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Discussion about this post