ஹப்புத்தளை பிரதேசத்தில் இருந்து கதிர்காமத்திற்கு புனித யாத்திரையாக வந்த குழுவொன்று இன்று (28 )செல்லக் கதிர்காமம் மாணிக்க கங்கை பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கதிர்காமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹப்புத்தளை தமிழ் மகா வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் தம்பிதன்ன, ஹப்புத்தளை பண்டார எலியாவத்தையைச் சேர்ந்த மோகன் ராஜ் சரண் என்ற 16 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாதாரண தர பரீட்சைக்கு தயாரானபோது நேர்ந்த துயரம்
சாதாரணதர பரீட்சைக்கு மாணவன் தயாராகிக் கொண்டிருந்தவேளை இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தந்தை குறிப்பிட்டார்.
கதிர்காமத்திற்கு வந்து செல்லக் கதிர்காமம் கோவிலில் பிரசாதம் வைக்கும் முன் மாணிக்க கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாணவனை காணவில்லை.மேலும் குழுவில் உள்ள மற்றவர்கள் தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டு வைத்தியசாலை்கு கொண்டு சென்ற போதிலும் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Discussion about this post