Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா நன்கொடை

June 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா நன்கொடை
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது. 

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி (MIZUKOSHI Hideaki) நேற்று கைச்சாத்திட்டுள்ளார். 

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. 

கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கையை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக  இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி இதன்போது தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில்  215.605 மில்லியன் சதுரமீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார நியூஸ்ஃபெஸ்டுக்கு தெரிவித்தார்.

23.23 மில்லியன் சதுர மீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Previous Post

குறைக்கப்படவுள்ள பேருந்து கட்டணம் : வெளியான தகவல்

Next Post

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது

Next Post
மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது

மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.