மைக்ரோசாப்ட் நிறுவனம்(microsoft) தனது கணினி விசைபலகையில் புதிதாக ஒரு அம்சத்தை இணைக்கவிருக்கிறது.
அதன்படி, செயற்கை நுண்ணறிவு அல்லது ஏஐ கீயை(ai) மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 சிஸ்டத்தில் இயங்கும் பயனர்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் கருவியான கோபிலட்டை (Copilot) அணுகலாம்.
அதன்படி, தகவல்களைத் தேடவும், மின்னஞ்சல்களை எழுதவும் மற்றும் படங்களை உருவாக்கவும் கோபிலட்டை (Copilot) பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், இந்த புதிய விசைப்பலகைகள் வரும் பெப்ரவரி மாதம் முதல் புதிய தயாரிப்புகளில் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த வாரம் லாஸ் வேகாஸில் நடைபெறவிருக்கும் CES தொழில்நுட்ப நிகழ்வில் கோபிலட் (Copilot)விசையுடன் சில தயாரிப்புகளை காட்சிப்படுத்தவிருக்கிறது.
Microsoft is adding a new button to the Windows keyboard for the first time in nearly 30 years https://t.co/PkzzEXsIGY
— Bloomberg (@business) January 6, 2024
Discussion about this post