Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 8 கோடி தங்கம்!-

June 6, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 8 கோடி தங்கம்!-
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த, கறுப்புப்பூச்சு பூசப்பட்ட சுமார் 4 கிலோ 611 கிராம் தங்கம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியானது எட்டரைக் கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை தொடர்பில் சுங்க அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர், இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால் தங்கத்தைக கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

சந்தேக நபர் 3 ஆம் திகதி காலை 6.45 மணியளவில் பாரிஸிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே அவரது பொதியிலிருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் சோதனையில் அதனைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவற்றின் மீது கறுப்புப்பூச்சு பூசப்பட்டிருந்தது.

சந்தேக நபரான பிரான்ஸ் நாட்டவர் அபராத தொகையை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

Tags: #Crisis#GoldPrice#Goldsmuggling#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

100 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட பட்டாம்பூச்சி

Next Post

இணையம் ஊடாக பண மோசடி; நபர் கைது

Next Post
இணையம் ஊடாக பண மோசடி; நபர் கைது

இணையம் ஊடாக பண மோசடி; நபர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.